விவசாய கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்

விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கர்நாடகா: மே-28

கர்நாடக விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், குமாரசாமி தலைமையிலான அரசை கண்டித்தும் பெங்களூரு தவிர்த்து மூன்று மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் அங்கு முழு அடைப்பு போராட்டம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, விவசாயக் கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். மாநிலத்தின் நிதிநிலைமையை புரிந்துகொண்டு, அந்த முடிவை எடுப்பதற்கு குறைந்தது ஒரு வார காலம் தேவை என்றும் அவர் கூறினார்.

Related Posts