விவசாய தொழிலை காப்பாற்ற ஒன்று சேர்ந்து போராட வேண்டும்

விவசாய தொழிலை காப்பாற்ற ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

      தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் 12 வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாட்டில் கலந்து கொண்டு பேசிய ஆர்.நல்லக்கண்ணு, ஜமீன்தார் காலங்களில், நிலமற்ற விவசாய கூலி தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்பட்டதாகவும், இதற்காக குரல் கொடுக்க 1936 ஆம் ஆண்டு தொடங்கிய சங்கம்தான் இந்த விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் என தெரிவித்தார். பாஜக ஆட்சியில்,வேலை வாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்து உள்ளது எனவும், பல திட்டங்களுக்கு பணம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், தீண்டாமை பெரிய நோயாக மாறி வருவதாக கூறிய நல்லக்கண்ணு, சாதி மதத்தை கடந்து நாட்டின் அடித்தளமாக இருக்கும் விவசாய தொழிலை காப்பாற்ற ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related Posts