வி.கே.சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன்  

வி.கே.சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன்  என்று அவரது சகோதரர் திவாகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

திருவாரூர் : மே-14

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திவாகரன்தனக்கு மன நலம் சரியில்லை என்று தன் மீது உள்ள ஆதங்கத்தில் தினகரன் கூறி உள்ளதாக தெரிவித்தார். சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன்  எனக்கூறிய திவாகரன்,  அவர் தன்னுடைய முன்னாள் சகோதரி  என கூறினார். சசிகலா நோட்டீஸ் தந்ததால் தங்கள் அரசியல் பயணம் நின்று விடாது என்று குறிப்பிட்ட அவர்சசிகலாவின் பெயரை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கியது தினகரனின் பிளாக்மெயில் அரசியல் என குற்றம்சாட்டினார்.

தன்னை குடும்பத்தில் இருந்து நீக்கியதற்கு நன்றி  என்றும்இனி தங்களை மாபியா குடும்பம் என அழைக்கமாட்டர்கள் என்றும் திவாகரன் கூறினார்.

Related Posts