வீட்டுக்கே தேடி வரும் இயற்கை உரங்கள்

போன் செய்தால் வீட்டுக்கே இயற்கை உரம் தேடி வரும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் சேகரமாகும் மக்கும் குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கையான, தரமான உரம் பொதுமக்களுக்கு கிலோ 20- ரூபாய்க்கு மாநகராட்சி மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. தற்பொழுது பெருநகர சென்னை மாநகராட்சி வசம் சுமார் 190 மெட்ரிக் டன் இயற்கை உரம் கையிருப்பு உள்ளது. இது பயன்படத் உதகந்தவை என நே‌ஷனல் அக்ரோ பவுண்டே‌ஷன் மற்றும் சென்னை டெஸ்டிங்க் லேபரட்டரி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனம் சான்றளித்துள்ளது. இந்த உரங்களை 9445194802 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் செயலியில் தொடர்பு கொண்டோ தேவையான அளவு உரத்தினை வாங்கிக்கொள்ளலாம். அளவை குறிப்பிட்டு முழு முகவரியை வழங்கினால் நேரடியாக வீடுகளுக்கு சென்னை மாநகராட்சி மூலம் கொண்டுவந்து வழங்கப்படும். உரத்தை வழங்கும்போது பணம் பெற்றுக்கொள்ளப்படும்.

Related Posts