வீரமரணம் அடைந்த கயத்தாறு வீரரின் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த கயத்தாறு வீரர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். பின்னர் காரில் வல்லநாடு,கே.டி.சி.நகர், சங்கர்நகர், கங்கைகொண்டான் வழியாக கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரிக்கு சென்ற ஸ்டாலின்அங்கு காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் சுப்பிரமணியன் திருவுருவப்பட்த்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய முக ஸ்டாலின் தி.மு.க. சார்பில் 2 லட்சம்ரூபாய் நிதியுதவியை  வழங்கினார். அப்போது மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள்  ஐ.பெரியசாமி,அனிதா.ராதாகிருஷ்ணன்,கீதாஜீவன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Posts