வீரேந்திர சேவாக்குடன் வாக்குவாதம் செய்தேனா ? : பிரீத்தி ஜிந்தா மறுப்பு

வீரேந்திர சேவாக்குடன் வாக்குவாதம் செய்ததாக வெளியான செய்தியை, ஐபிஎல் பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மறுத்துள்ளார்.

பஞ்சாப் : மே-12

ராஜஸ்தானிடம் பஞ்சாப் அணி தோல்வி அடைந்ததற்கு, கேப்டன் அஸ்வினை முன்கூட்டியே களமிறக்கியது தான் காரணம் என, அணியின் ஆலோசகர் சேவாக்குடன், உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா வாக்குவாதம் செய்ததாக கூறப்பட்டது. இதனால், ஆலோசகர் பொறுப்பில் இருந்து சேவாக் விலகப் போவதாகவும் தகவல் வெளியாகின. இதை மறுத்துள்ள பிரீத்தி ஜிந்தா, போட்டி முடிந்த பின் வெற்றித்தோல்வி குறித்து விவாதிப்பது வழக்கமானது தான் என்றும், சேவாக்குடன் கருத்து வேறுபாடு ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts