வீழ்ச்சியை நோக்கி இந்தியா செல்கிறது

மிகவும் சிக்கலான பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா செல்வதாக கே.பி.எம்.ஜி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கே.பி.எம்.ஜி. நிறுவனம், உலக அளவில் மிக முக்கியமான தணிக்கை நிறுவனமாகும். உலக அளவில் நிதி மற்றும் வர்த்தக ஆலோசனை வழங்கும் கே.பி.எம்.ஜி. நிறுவனம், இந்தியா பற்றி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், 30 ஆண்டுகளாக வளர்ந்து வந்த இந்தியப் பொருளாதாரம் சரிவை நோக்கி செல்வதாக கூறப்பட்டுள்ளது. வேகமாக வளரும் நாடாக கடந்த ஆண்டு வரை இருந்த இந்தியா, தற்போது அந்த இடத்தை இழந்து விட்டதாகவும், இந்தியாவில் விற்பனை குறைந்து வேலை இழப்புகள் அதிகரித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சரியும் பொருளாதாரத்தை சீராக்க இந்திய அரசு அவசர முயற்சிகளை மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ள கே.பி.எம்.ஜி., பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி உதவி தருவதாக இந்திய அரசு அறிவித்துள்ளதை நினைவு கூர்ந்துள்ளது. அரசின் சலுகை அறிவிப்புகள், சரிந்து வரும் இந்திய பொருளாதாரத்தை தடுக்க போதுமானதல்ல என கருத்து தெரிவித்துள்ள அந்த நிறுவனம், கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related Posts