வெனிசுலா மீது புதிய பொருளாதார தடைகளை அறிவித்தது அமெரிக்கா

வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் நிக்கோலஸ் மதுரோ வென்ற நிலையில், அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

வெனிசுலா : மே-22

வெனிசுலாவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்த நிலையில், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார். இதையடுத்து, அமெரிக்காவிலிருந்து வெனிசுலாவுக்கான பொருளாதார பரிவர்த்தனைகள் மற்றும் இதர ஒப்பந்தங்களுக்கும் அதிபர் ட்ரம்ப் தடை விதித்துள்ளார். மேலும், அமெரிக்க நிறுவனங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலான வெனிசுலா அரசின் பங்குகள், விற்பனை, பரிமாற்றங்கள், போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related Posts