வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக இயல்பை விட வெப்பம் அதிகமாக இருந்து வருவதாக வானிலை மையம் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை,திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஆயக்குடி மற்றும் தென்காசியில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகப்பட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts