வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வாகராயம்பாளையத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது.

கொடைக்கானல் நகர்பகுதிகளில் பெய்த லேசான மழை காரணமாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இங்குள்ள பிரையண்ட் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள், மழையில் நனைந்தவாறு பூங்காவின் எழிலை ரசித்து மகிழ்ந்தனர். இதேபோல் கீழ்மலை, பெருமாள் மலை பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது.

Related Posts