வெற்றி கூட்டணியை முதல்வர் மற்றும் துணை முதல்வர்  அமைப்பார்கள் : விஜயபாஸ்கர் 

விரைவில் ஒரு வெற்றி கூட்டணியை அம்மா வழியில் முதல்வர் மற்றும் துணை முதல்வர்  அமைப்பார்கள்.என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். .

கரூர் பேருந்து நிலையத்தில் செய்திமக்கள் தொடர்புதுறை சார்பில் அமைக்கபட்டுள்ள அதிமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை குறித்து விளக்க கண்காட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். பின்னர் சாதனை குறித்த புத்தகத்தை வெளியிட்டு கண்காட்சியினை பார்வையிட்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி குறித்து  இறுதி செய்யபடும் என்றார். தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது என்றும், . விரைவில், ஒரு வெற்றி கூட்டணியை அம்மா வழியில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் அமைப்பார்கள்.என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.  இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா,மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கொண்டனர்.

Related Posts