வெளிசந்தைகளில் விற்கும் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க முடியும்:செல்லூர் ராஜு

   கூட்டுறவு சிறப்பங்காடிகளை திறப்பதன் மூலம் வெளிசந்தைகளில் விற்கும் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

      சென்னை தியாகராய நகர் சதாசிவம் சாலையில்  கூட்டுறவு  சிறப்பங்காடியை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் இயக்கப்பட்டு வரும் 32 ஆயிரத்து 892 நியாய விலைக் கடைகளிலும் படிபடிப்படியாக பல்பொருள் அங்காடி அமைக்க வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப முதற்கட்டமாக100-கடைகள் பெருநகரங்களில் திறக்கப்படுவதாக தெரிவித்தார். மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகளில் மக்கள் விரும்பும் பொருட்களை கொள்முதல் செய்து  விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் தேவைப்பட்டால் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என ஓ. பன்னீர் செல்வம் கூறியது பற்றி விளக்கமளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, நாடளுமன்ற தேர்தலில்  அனைத்து தொகுதிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் துணை முதல்வர்  அவ்வாறு  கூறியதாக தெரிவித்தார்.

Related Posts