வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரண பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சுங்கவரி ரத்து செய்யப்படும்

கேரளாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரண பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சுங்கவரி ரத்து செய்யப்படும் என்று மத்திய  அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா, வரலாறு காணாத மழையால் நிலைகுலைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியா மட்டும் அல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் கேரளாவுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கேரளாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரண பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சுங்கவரி ரத்து செய்யப்படும் எனவும்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related Posts