வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் முதலமைச்சர் : தனது இலாகாக்களை எந்த ஒரு அமைச்சரிடமும் ஒப்படைக்கமாட்டார் என தகவல்

வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது இலாகாக்களை ஓ.பன்னீர் செல்வம் உள்பட எந்த ஒரு அமைச்சரிடமும் ஒப்படைக்கமாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் 28ம் தேதி முதல் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் முதலமைச்சர் பழனிசாமி சுமார் 12 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் ஒப்புதல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். கல்வி, உணவு, எரிசக்தி துறை மற்றும் தொழில்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதனிடையே முதலமைச்சர் தனது பொறுப்புகளை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து விட்டு வெளிநாடு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் தனது இலகாக்களை யாரிடமும் ஒப்படைக்க மாட்டார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மிக அவசரம் என்றால் அதிகாரிகளுடன் வீடியோ மூலம் பேசி அவர் நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

Related Posts