வெளிநாடுகளில் தவித்த 90 ஆயிரம் இந்தியர்களை காப்பாற்றி இருக்கிறோம்

பா.ஜ.க. தலைமயிலான மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் கடந்த 4 வெளிநாடுகளில் தவித்த 90 ஆயிரம் இந்தியர்கள் காப்பாற்றப்பட்டதாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

டெல்லி : மே-28

பா.ஜ.க. ஆட்சியில் வெளியுறவுத்துறை ஆற்றிய சாதனை பட்டியல் புத்தகத்தை டெல்லியில் இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வெளியிட்டு பேசினார். அப்போது பேசிய அவர், உலகில் உள்ள பல நாடுகளுக்கு, நமது நாட்டின் தலைவர்கள் சென்றதே இல்லை என்பதை அறிந்து தான் வியப்படைந்ததாக தெரிவித்தார். பாஜக ஆட்சி அமைந்த பிறகு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளுடனும் நட்புறவை ஏற்படுத்தவும், பலப்படுத்தவும் தீர்மானித்ததாகவும், அதன்படி, இதுவரை 186 நாடுகளுடன் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாகவும் கூறினார்.

வெளிநாடுகளில் தவித்த 90 ஆயிரம் இந்தியர்களை காப்பாற்றி இருப்பதாக தெரிவித்த அமைச்சர் சுஷ்மா சுவராஜ், கடல்கடந்து சென்ற இந்தியர்கள் இன்று வெளிநாடுகளில் அமைதியாக வாழ்கிறார்கள் என்று கூறினார்.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என்று ஒருபோதும் கூறியதில்லை என்று குறிப்பிட்ட அவர், தீவிரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை சுமுகமான பேச்சுவார்த்தை நடத்த இயலாது என்று கூறினார்.

Related Posts