வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்வோரில் இந்தியர்கள்தான் அதிகம்

உலகிலேயே வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்வோரில் இந்தியர்கள்தான் அதிகம் என ஐ.நா. கூறியுள்ளது.

ஐநா மக்கள் தொகைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இதன்படி, 2019-ம் ஆண்டு உலக அளவில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 27 கோடியே 2 லட்சம் பேராகும். இதில் 1 கோடியே 75 லட்சம் பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. மெக்சிகோவிலிருந்து 1 கோடியே 18 லட்சம் மக்களும், சீனாவிலிருந்து 1 கோடியே 7 லட்சம் பேரும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 51 லட்சம் பேருக்கு இந்தியா இடமளித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டு வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

Related Posts