வெள்ளை காகிதத்தில் கருப்பு மையால் அச்சிடபட்ட ஜவுளிகடை விளம்பரம்,பாஜக தேர்தல் அறிக்கை: கே எஸ் அழகிரி

    நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகத்திலும் இந்தியாவிலும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார்.  காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உலகமே வியக்கும் கதாநாயகனாக திகழ்கிறது எனவும், ஆனால் பாஜக தேர்தல் அறிக்கை வெள்ளை காகிதத்தில் கருப்பு மையால் அச்சிடபட்ட ஜவுளிகடை விளம்பரம் போல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காதது கம்யூனிஸ்ட்களின் தவறு என்ற தா பாண்டியனின் கருத்தை வரவேற்பதாக கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.      

Related Posts