வெஸ்ட் இண்டிஸ் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

நார்த்சவுண்டு, சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. இந்தியா முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்னுக்கு சுருண்டது. இதையடுத்து, இந்திய அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 419 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய பிராத் வெயிட் 1 ரன்னும், ஜான் சேப்பல் 7 ரன்னும் எடுத்து பும்ரா பந்து வீச்சில் நடையை கட்டினர். இதைத்தொடர்ந்து பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் மிரட்டினர். இதனால் வெஸ்ட் இண்டிஸ் அணியின் வீரர்கள் மளமள வென தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டிஸ் அணி 26.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமர் ரோச் 38 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில் பும்ரா 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், முகமது சமி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதன்படி இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணியை வீழ்த்தியது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

Related Posts