வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது : பிரியங்கா காந்தி

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் மீதான சிபிஐ நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தோல்விகளை, உண்மையாக, பயமின்றி ப.சிதம்பரம் அம்பலப்படுத்தி வருவதால் அவர் வேட்டையாடப்படுகிறார் என பிரியங்கா கூறியுள்ளார். ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்றும், உண்மைக்காக அதன் விளைவுகளை சந்திக்க தயார் என்றும் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உள்துறை, நிதியமைச்சர், எம்.பி. என நாட்டிற்காக விசுவாசமாக பணியாற்றியவர் ப.சிதம்பரம் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Related Posts