வேதாந்தா நிறுவனத்திற்கு சாதகமாக ஸ்டெர்லைட் ஆய்வு குழு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு

வேதாந்தா நிறுவனத்திற்கு சாதகமாக ஸ்டெர்லைட் ஆய்வு குழு செயல்பட்டு வருவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுகுழு மக்களிடம் கருத்து கேட்பது, திசை திருப்பும் செயல் என தெரிவித்தார். ஆய்வு செய்ய வேண்டிய கடமையிலிருந்து இந்த குழு தவறிவிட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு இருக்கிறது என்பதை எல்லோரும் அறிய வேண்டுமானால், தூத்துக்குடி வட்டார மக்களிடம் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஒரு கொள்கை முடிவெடுத்து அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related Posts