வேதாந்தா நிறுவனம், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது

தமிழகத்தில் 3 இடங்கள் உட்பட மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

          நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமிட்டு அதற்கான நிறுவனங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இதன்படி தமிழகத்தில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 55 இடங்களிலும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தம் இன்று டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்த ஏலத்தில், வேதாந்தா நிறுவனத்துக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இரண்டு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களைக் கைவிட வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில்,ஹைட்ரோகார்பன் எடுக்கும் அனுமதி வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பங்கேற்ற வேதாந்தா குழும நிறுவனர் அனில் அகர்வால், செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் எனவும் இது தொடர்பாக தங்கள் தரப்பு வாதங்களை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முன் வைத்துள்ளதாகவும் கூறினார்

Related Posts