வேர்ல்டு கிளாஸ் சிட்டி வரிசையில் கோவை மாவட்டத்தையும் சேர்க்க வேண்டும்

வேர்ல்டு கிளாஸ் சிட்டி வரிசையில் கோவை மாவட்டத்தையும் சேர்க்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சரிடம் வலியுறுத்தியதாக அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

தமிழக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறைக்கு ஆயிரத்து 390 கோடி ரூபாயை விடுவித்தமைக்காக டெல்லியில்  நிதியமைச்சர் அருண்ஜெட்லியை, அமைச்சர் வேலுமணி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது மின்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, வேல்டு கிளாஸ் சிட்டி பட்டியலில் பொன்னேரி, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தையும் சேர்க்க வேண்டும், மும்பை, பெங்களூரு இன்டஸ்டிரியல் காரிடரை கோவை வரை நீடிக்க வேண்டும் என இரண்டு கோரிக்கைகளை  நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் வலியுறுத்தியதாக கூறினார்.

Related Posts