வேலூரில் பள்ளி வாகனங்களின் பராமரிப்பு குறித்து ஆய்வு

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில், பள்ளி வாகனங்களின் பராமரிப்பு குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர் : மே-26

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் சரியான ஒழுங்கான முறையில் பராமரிக்கப்பட்டு இயங்குகிறதா? என்பதை ஆண்டுதோறும் ஆய்வு செய்து, அந்த வாகனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், அரசு விதிமுறைகளின் படி பள்ளி வாகனங்கள் பாராமரிக்கப்படுகிறதா, பேருந்தில் உள்ள அவசரகால வழி, மருத்துவ முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள் சரியாக உள்ளனவா என்பது பற்றி சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், ஓட்டுநர்கள் செல்போன் பேசியபடி பள்ளி வாகனங்களை இயக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதில், 65 வாகனங்கள் சரியாக இல்லாததால், தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

Related Posts