வேலூரில் வெகுவிமரிசையாக நடைபெற்ற எருது விடும் திருவிழா

வேலூர் மாவட்டம் மேல்அச்சமங்கலத்தில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வேலூர் : ஏப்ரல்-25

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மேல்அச்சமங்கலத்தில் கிராமத்தில், எருது விடும் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், வாணியம்பாடி, ஆலங்காயம், மிட்டூர், வள்ளிபட்டு, வெள்ளக்குட்டை, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துக் கொண்டு, சீறிப்பாய்ந்து ஓடின.

இதில், குறைந்த நேரத்தில் இலக்கை கடந்து ஓடிய காளையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Related Posts