வேலூர் தொகுதியிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – மு.க.ஸ்டாலின்

வேலூர் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்  வெற்றி பெறுவார் என்றுஅக்கட்சியின்  தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

கொளத்தூர் தொகுதியில் தூர் வாரி சீரமைக்கப்பட்ட அரிதாஸ் தாமரைக் குளத்தில் சுற்றுச்சுவர்கள்,நடைபயிற்சிக்கான பாதை, உடற்பயிற்சிக் கூடம், சிறுவர் விளையாட்டுத் திடல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குளத்தை திறந்து வைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரக் கன்றுகளை நட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி கருவிகளில் உடற்பயிற்சியும் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கொளத்தூர் பெரியார் நகரில் 69 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நூலகம் ஒன்றையும்அவர் திறந்து வைத்தார். அனிதா அச்சீவர்ஸ் என்ற பெயரில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் பயின்ற 65 மாணவ – மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணனிகள்உள்ளிட்டவற்றையும் அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின் வேலூர் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்  வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.

Related Posts