வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தவே துரைமுருகன் வீட்டில்  வருமானவரித்துறை சோதனை: மு.க.ஸ்டாலின் 

வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக குடியாத்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மத்தியில் சர்வாதிகார மோடி ஆட்சியையும், மாநிலத்தில் உதவாத எடப்பாடி ஆட்சியை அகற்றவும் திமுகவுக்கு வாக்களியுங்கள்என்று கேட்டுக் கொண்டார். . 40-க்கு 40 மக்களவைத் தொகுதியிலும், 22-க்கு 22 சட்டமன்ற தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற பின் அதிமுக ஆட்சி அகற்றப்படும் எனவும்,  வேலூரில் தேர்தலை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தலை நிறுத்தவே துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டதாகவும், . 2016சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற 650 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டதாக  ஆங்கிலநாளேடு ஒன்றில் வெளியான செய்தியை அவர் சுட்டிக்காட்டினார். . குடியாத்தத்தில் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் எனவும்,  ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்படும்எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Posts