வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உழவர் சந்தையில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்

வேலூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  உழவர் சந்தையில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு  பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வேலூருக்கு வந்துள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  நடை பயிற்சியின் இடையே தொரப்பாடியில் உள்ள உழவர் சந்தைக்கு சென்று தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனத்துக்கு வாக்குச் சேகரித்தார். சிறு குறு விவசாயிகள் மக்கள் உள்ளிட்டோரை சந்தித்து மு.க.ஸ்டாலின் வாக்குச் சேகரித்தார். அப்போது  அவருடன், மக்கள் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டினர்.உழவர்சந்தைக்கு வெளியேயும் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வாக்குச் சேகரித்தார். இன்று மாலை கே.வி.குப்பம் சட்டம்ன்றத் தொகுதிக்குட்பட்ட இலத்தேரி, செஞ்சி, பனமடங்கி, பரதராமி, சித்தூர்கேட், கொண்டசமுத்திரம், கீழ் ஆலத்தூர், பி.கே.புரம், கே.வி.குப்பம், மேல்மாயில், வடுகந்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts