வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது

அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் என மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள். ஆயிரத்து 553 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். ஆயிரத்து 600 துணை ராணுவத்தினரும், 5 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலை முன்னிட்டு வேலூர் மக்களவைத் தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. வேலூர் பொதுப் பணித்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வாக்களித்தார். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. பின்னர் வாக்கு எந்திரங்கள் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்.

Related Posts