வேளாங்கண்ணியில் இருந்து மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணம்

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் 5ஆம் நாளான இன்று, வேளாங்கண்ணியில் இருந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

நாகை : ஏப்ரல்-11

திருச்சி முக்கொம்புவில், கடந்த சனிக்கிழமை அன்று காவிரி உரிமை மீட்பு பயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு, விவசாயிகள், பொதுமக்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். 5ஆம் நாளான இன்று, வேளாங்கண்ணியில் இருந்து, காவிரி உரிமை மீட்பு பயணத்தை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். இன்றைய நாளின் முதற்பகுதியாக, வேளாங்கண்ணியில் இருந்து, பரவை, பாப்பாகோவில், நாகப்பட்டினம் வழியாக செம்பனார்கோவில் சென்றடைகிறார். அங்கு, விவசாயிகள், அரசியல் கட்சியினரை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். மு.க.ஸ்டாலினின் காவிரி உரிமை மீட்பு பயணத்தில், திமுகவினர் மட்டுமின்றி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமை கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Posts