வைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலமாக தொடங்கியது.

திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலமாக தொடங்கியது.

திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் அமைந்துள்ள ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழாஆண்டுமோறும் மார்கழி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, பகல்பத்து வைபவத்துடன் இன்று காலை தொடங்கியது. இதில், நீள் முடி கொண்டை அணிந்து, காசு மாலை, முத்து மாலை அலங்காரத்துடன் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏகாதசியின் முக்கிய விழாவான, வரும் 18 ஆம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. சொர்க்கவாசல் திறப்பு அன்று பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், குற்றங்களை தடுக்கவும் போக்குவரத்தை சீர்ப்படுத்தவும் மாநகர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Related Posts