வைகை அணைக்கு வர கூடிய தண்ணீர் இடையே திருடப்படுவதில் ஆளுங்கட்சிக்கும் பங்கு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி 

பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு வர கூடிய தண்ணீர் இடையே திருடப்படுவதில் ஆளுங்கட்சிக்கும் பங்கு உள்ளதா என மதுரை மத்திய தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடும் நிலையில் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு வர கூடிய தண்ணீர் போடியில் மர்ம நபர்கள் சிலரால் திருடப்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும்  இது குறித்து பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லைஎன்றும் கூறிய அவர்,  தண்ணீர் திருட்டில் ஆளும்கட்சிக்கும் பங்கு உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.

Related Posts