வைகோவின் உதவியாளர் அடைக்கலம் தலைமையில் கால்பந்து போட்டி

மதிமுக பொதுச்செயலாளரும்  மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவின்  உதவியாளர்  அடைக்கலம் தலைமையில் தொடர் கால்பந்து போட்டி நடைபெற்றது

திருச்சி விதை கால்பந்து அகாடமி சார்பில் மண்டல அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி  தனியார் கல்லூரி மைதானத்தில நடைபெற்றது. 3 நாள் நடைபெற்ற  போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், காரைக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 14 அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் திருச்சிபிஷப் ஹீபர் கல்லூரி முதல் பரிசும், இரண்டாவது பரிசை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும், மூன்றாவது பரிசை ஜமால் முகமது கல்லூரியும் வென்றன. இதில் சீட் கால்பந்து  செயலாளர் செயலாளர் மணிமாறன்,  துணைத்தலைவர் சரவணன்,  பொருளாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Posts