வைகோவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை : கே.எஸ். அழகிரி

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். வைகோவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை, அவர் நல்ல தலைவர் என்றும் கே.எஸ். அழகிரி கூறினார்.

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் நடைபெற்றதில் தமிழக அரசுக்கும் பொறுப்புள்ளது என்று அவர் கூறினார். பொறியியல் மாணவர்களுக்கு பொறியியல் குறித்த ஞானம் தெரிய வேண்டுமே ஒழிய பகவத் கீதை தேவையில்லை என்றும் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

Related Posts