வைகோ கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது : மதிமுக அறிவிப்பு

மதிமுக பொதுச்செயலாள்ர் வைகோ கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கழக தோழர்கள் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்று மதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கழகத் தோழர்கள் ஆர்வ மிகுதியால் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வைகோ நிகழ்ச்சிகளில் தொண்டர்ககள் பட்டாசு வெடிப்பதால்  போக்குவரத்து தடைபட்டு, சுற்று சூழல் மாசுபடுகிறது என்றும் இதனை மீறி பட்டாசு வெடிப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

Related Posts