வைகோ தலைமையில் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம்

தமிழக காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது.

சென்னை : மே-04

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.  இந்தக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி, திராவிடர் கழகம், உலகத் தமிழர் பேரமைப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவுள்ளன. இதேபோல், பெருந்தலைவர் மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக், இந்திய சோசியல் டெமாக்ரடிக் கட்சி, மே பதினேழு இயக்கம், மக்கள் கண்காணிப்பகம், தமிழ் உணர்வு அமைப்புகள் உள்ளிட்டவையும் கலந்து கொள்கின்றன. இந்த கூட்டத்தில், தமிழக காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்தும், அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

Related Posts