வைகோ நலம் : ராமசந்திரா மருத்துவமனை அறிவிப்பு

மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ நலமுடன் இருப்பதாக ராமசந்திரா மருத்துவமனை கூறியுள்ளது.

வைகோ உடல்நிலை தொடர்பாக சென்னையில், போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனை, மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 19-ந் தேதி மருத்துவ பரிசோதனைக்காக வைகோ அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. வைகோ உற்சாகமாக இருப்பதாகவும், முக்கிய உறுப்புகள் இயல்பாக செயல்படுவதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts