வைகோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக வைகோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-02

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, பொதுமக்கள், பல்வேறு கட்சிகள் போராடி வருவதாகவும், ஆனால், மத்திய, மாநில அரசுகள் மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது வேதனையை அளிக்கிறது என்று கூறினார். மேலும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக வைகோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

Related Posts