வைகோ வாகனம் மீது மதுபாட்டில் வீசப்பட்டதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்

 

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பிரச்சாரத்தின்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாகனத்தின் மீது மதுபாட்டில் வீசப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, ஏப்ரல்-18 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் தீக்குளித்து உயிர்நீத்தார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெருமாள்பட்டிக்கு சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தீக்குளித்து உயிர்நீத்த சரவண சுரேஷின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாகனம் மீது மதுபாட்டில் வீசப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட மக்கள் விரும்பாத திட்டங்களை எதிர்த்து பல ஆண்டுகளாக வைகோ போராடி வருவதாக அவர் குறிப்பிட்டார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டார்.

Related Posts