வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்து லண்டன் நீதிமன்றம் 

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விட்டார்.

இந்த நிலையில் அவர் லண்டனில் கடந்த மார்ச் 19-ந்தேதி கைது செய்யப்பட்டார்.  20-ந்தேதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் இருமுறை ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதனை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனையடுத்து மூன்றாவது முறையாக தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே அவரை நாடு கடத்துவது தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய இந்திய அதிகாரிகளிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

Related Posts