வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார்

 சீன ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் லாத்வியா வீராங்கனையை எளிதில் வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

      சீன ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டி இன்று பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் வோஸ்னியாக்கி – தரநிலை பெறாத லாத்வியாவின் செவஸ்டோவாவை எதிர்கொண்டார். அரையிறுதி ஆட்டத்தில் கரோலின் வோஸ்னியாக்கி 6க்கு1, 6க்கு3 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை குயாங் வாங்கை வீழ்த்தியிருந்தார்.. செவஸ்டோவா அமெரிக்க ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகாவை4க்கு6, 4க்கு6 என்ற நேர்செட்டில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்திருந்தார். இதனால் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 8-ம் நிலை வீராங்கனைக்கு அதிர்ச்சி அளித்த செவஸ்டோவா வோஸ்னியாக்கியாவிற்கும் அதிர்ச்சி அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் வோஸ்னியாக்கி 6க்கு3, 6க்கு3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்

Related Posts