ஸ்டார் ஃப்ரூட் பழங்களால் விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நல்ல விளைச்சல் கண்டுள்ள ஸ்டார் ஃப்ரூட் பழங்களுக்கு, போதுமான விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் உள்ள மலைக் கிராமங்களான பேத்துப்பாறை, வடகவுஞ்சி, அஞ்சி வீடு உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டார் பழங்களை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஸ்டார் பழங்கள் நல்ல விளைச்சலைக் கண்டுள்ளன. இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடைய இந்த பழங்கள் ஒரு கிலோ நூறு ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இந்த பழத்தை மக்களும் உரிய விலை கொடுத்து வாங்கிச் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் ஸ்டார் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Related Posts