ஸ்டாலினை, முதலமைச்சர் விமர்சனம் செய்தது பண்பாடற்ற செயல்

மழை  வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலினை, முதலமைச்சர் விமர்சனம் செய்தது பண்பாடற்ற செயல் என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கில் ஆஜரான வைகோ, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீலகிரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற ஸ்டாலினை விமர்சனம் செய்தது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல என அவர் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் தடை குறித்து மத்திய அரசு அமைத்திருக்கும் தீர்ப்பாயம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் நடைபெற இருப்பதாக கூறினார். இரண்டு நாட்களிலும் தாமே வாதங்களை முன் வைக்க இருப்பதாகத் தெரிவித்தார்.
(பைட்
கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீலகிரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், மதகுகளை சரி செய்யாததால், இந்த தண்ணீர் வீணாக கடலுக்கு தான் போகப் போகிறது என வைகோ தெரிவித்தார்.

தமிழக வாழ்வாதாரங்களை காப்பதற்காக போராடும் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீது 38 வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும், அவர் மீதான வழக்குகள் அனைத்தையும் வாபஸ் வாங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தமிழுக்கும் தமிழினத்துக்கும் தொண்டு செய்யக் கூடிய புகழூர் விஸ்வநாதன் அவர்களை முகிலன் பிரச்சனையில் சித்திரவதைக்கு உள்ளாக்கி இருப்பது, இந்த அரசு மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கிறது என்பதற்கு சாட்சி எனவும் வைகோ கூறினார்.

Related Posts