ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு – பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி : மே-05

தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் இன்று 82-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் தூத்துக்குடி விவிடி சந்திப்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  உண்ணாவிரதப் போராட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.   

Related Posts