ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கைச் சந்திக்கத் தயார்: வைகோ

 

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கை சந்திக்கத் தயார் என்று மதிமுகபொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை, மே-01 

நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கடந்த 28 ஆம் தேதி மதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்நடைபெற்றது..இந்தக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம்தொடங்கிய மக்களுக்கு வரவேற்பு தெரிவித்தார். மேலும் ஆலையை இழுத்து மூடும் போராட்டத்தை மக்கள் நடத்தினால், முன்னிலை வகிப்பேன் என்றும்அவர் கூறினார். மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தூத்துக்குடி காவசல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் என்ன பேசினேனோ, அதையே நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்று கூறினார்.

Related Posts