ஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட உத்தரவு – ஸ்டெர்லைட் நிறுவனம் அறிவிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி : மே-25

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ஆம் தேதி தூத்துக்குடியில் பேரணி சென்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மும்பை பங்குச் சந்தைக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 23ம் தேதி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டித்ததோடு, ஆலையின் முதல் அலகை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது என்று கூறியுள்ளது. ஏற்கெனவே மார்ச் 27-ஆம் தேதி முதல் ஆலை செயல்படாமல் தான் இருந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ள ஸ்டெர்லைட் நிறுவனம், அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம் என்றும் அரசிடம் இருந்து மறு உத்தரவு வந்த பின்பு ஆலை இயங்கத் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Posts