ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் அகற்றும் பணிகள் தீவிரம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு ஏற்பட்டுள்ள கிடங்கில் இருந்து கந்தக அமிலத்தை டேங்கர் லாரிகள் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி : ஜூன்-19

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்  நேற்று முன்தினம் மாலை கசிவு ஏற்பட்டது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில் கந்தக அமில சேமிப்புக் கிடங்கில் லேசான கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். கசிவால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறி இருந்தார். இந்நிலையில், நேற்று காலை ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்ற வல்லுநர் குழுவானது, கசிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டது. மேலும், கந்தக அமிலத்தை ஆலையில் இருந்து வேறு இடத்துக்கு டேங்கர் லாரிகளில் பாதுகாப்பாக கொண்டு செல்லும் பணி இன்று இரண்டாவது நாளாக  நடைபெற்று வருகிறது.காலையில் 4 டேங்கர் லாரிகள் மூலம் கந்தக அமிலம் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து டேங்கர் லாரிகள் மூலம் கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Posts