ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமிலக் கழிவுகளை எங்கே கொட்டுவது என்பதில் சிக்கல்

ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு ஏற்பட்ட கிடங்கின் அடிப்பகுதியில் உள்ள கந்தக அமிலக் கழிவுகளை எங்கே கொட்டுவது என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி : ஜூன்-25

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு ஏற்பட்ட கந்தக அமிலக் கிடங்கில் இருந்து அமிலத்தை வெளியேற்றும் பணி இன்று எட்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 94 டேங்கர்கள் மூலம் இரண்டாயிரத்து 100 டன் அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளது. அவை பல்வேறு இடங்களில் உள்ள தனியார் ஆலைகளுக்கு விற்கப்பட்டன. இந்நிலையில், தற்போது கிடங்கின் அடிப்பகுதியில் கந்தக அமிலக் கழிவுகள் எஞ்சியுள்ளன. இவற்றை எந்திரம் மூலம் எடுப்பதில் சிக்கல் உள்ள சூழலில், வெளியில் எடுத்தாலும் விற்க முடியாது என்பதால், எங்கே கொட்டுவது என்று அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts