ஸ்டெர்லைட் ஆலையை அடித்து நொறுக்குவோம்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசம்

 

 

தூத்துக்குடி மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் ஸ்டெர்லைட் ஆலையை அடித்து நொறுக்குவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் கட்சியின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு மற்றும் அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய வெறியாட்டங்கள் குறித்து விளக்கினார்.

மக்களை கொன்று குவிப்பதற்காக உள்ள ஸ்டெர்லைட் ஆலையை அடித்து நொறுக்குவோம் என்று தெரிவித்த வைகோ, முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் வருத்தம் தெரிவித்தது குறித்து வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது, ஆடு நனைகிறதே என ஓநாய் அழுகிறது என்று விமர்சித்தார். அனில் அகர்வால் இனி வாலை நீட்ட முடியாது என்றும் கண்டித்தார்.

Related Posts