ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வசீப்தர் நியமனம்

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வசீப்தரை  நியமனம் செய்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் பஞ்சாப், அரியானா முன்னாள் தலைமை நீதிபதி வசீப்தரை ஆய்வுக்குழு தலைவராக நியமித்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் நீதிபதி வசீப்தர் தலைமையிலான குழுவில் மேலும் 2 உறுப்பினர்கள் இடம்பெறுவர்.

இந்தக்குழு ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு குறித்து ஆய்வு செய்து 6-வாரகாலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை ஆய்வு செய்த பின், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதா? அல்லது நிரந்தரமாக மூடுவதா? என்பது குறித்து பசுமை தீர்ப்பாயம் முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts