ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை மூட, தமிழக அரசு சட்டப்பேரவையில் சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்க வேண்டும் எனவும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தாம் சொல்லும் கருத்துகளை கேட்பதில்லை எனவும் கூறினார். அரசு தரப்பு கருத்துகளையும், நியாயங்களையும் பசுமைத் தீர்ப்பாயம் கேட்க வேண்டும் எனவும், தலைமை அமர்வு நியாயமாக செயல்பட வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தினார்.

பசுமை தீர்ப்பாயம் நடுநிலையுடன் செயல்படுவதாக தனக்கு தெரியவில்லை எனவும், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த குழு வரக்கூடாது என சொன்னதை பசுமை தீர்ப்பாயம் கேட்க தயராக இல்லை எனவும் அவர் தெரிவித்தார். வரும் 24ஆம் தேதி சென்னையில் விசாரணை வைப்பதாகவும், அங்கு வந்து கருத்துக்களை சொல்லுங்கள் என பசுமைத் தீர்ப்பாய நீதிபதிகள் கூறியிருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மதிமுக மதுரை  வடக்கு மாவட்டச் செயலாளர் மார்நாடின் தாயார் ஆ.அம்மையத்தாள் கடந்த 17-ந் தேதி உடல் நலக்குறைவால் குலமங்கலத்தில் காலமானார். இந்நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது துணைவியார் ரேணுகாதேவியுடன், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆ.அம்மையத்தாளின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி ,அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Related Posts